WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 25, 2025

CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு உத்தேச அட்டவணை வெளியீடு - பிப்ரவரி 17 முதல் தேர்வு தொடக்கம்.

 

2025-26 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான உத்தேச அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் பிப்ரவரி 17-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026
ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பிற்கு இரண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பிற்கு துணைத்தேர்வு கிடையாது. 12-ம் வகுப்பிற்கு வழக்கம் போல் பொதுத்தேர்வு மற்றும் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு விளையாட்டு வீரர்களுக்கு தனித்தேர்வு நடைபெறும். தேர்விற்கு மாணவர்கள் திட்டமிட்டு தயாராகும் வகையில், ஆசிரியர்கள் பாடங்களை விரைவாக முடித்து தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்தாண்டு உத்தேச அட்டவணை வெளியிடப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இந்தாண்டு பொதுத்தேர்வை இந்தியா மட்டுமின்றி 26 நாடுகளில் இருந்து சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

  • 10-ம் வகுப்பிற்கு முதல் பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் தொடங்கி மார்ச் 9- வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • 12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் தொடங்கி ஏப்ரல் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • 10-ம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வு 2026 மே 15 முதல் ஜூன் 1 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு உத்தேச பொதுத்தேர்வு அட்டவணை 2026

தேதிபாடம்
17.02.2025கணிதம்
21.02.2025ஆங்கிலம்
23.02.2025பிரெஞ்சு
24.02.2025தமிழ்
25.02.2025அறிவியல்
27.02.2025கணினி பயன்பாடு, ஏஐ, தகவல் தொழில்நுட்பம்
28.02.2025சமஸ்கிருதம்
02.03.2025இந்தி
07.03.2025சமூக அறிவியல்


சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு உத்தேச பொதுத்தேர்வு அட்டவணை 2026

தேதிபாடம்
17.02.2025பயோடெக்னாலஜி
18.02.2025உடற்கல்வி
20.02.2025இயற்பியல்
21.02.2025வணிக நிர்வாகம்
26.02.2025புவியியல்
28.02.2025வேதியியல்
09.03.2025கணிதம்
12.03.2025ஆங்கிலம்
14.03.2025வீட்டு அறிவியல்
16.03.2025இந்தி
17.03.2025தமிழ்
18.03.2025பொருளாதாரம்
23.03.2025அரசியல் அறிவியல்
25.03.2025கணினி அறிவியல்
27.03.2025உயிரியல்
28.03.2025கணக்கியல்
30.03.2025வரலாறு
08.04.2025பிரெஞ்சு
09.04.2025சமஸ்கிருதம்


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வு உத்தேச அட்டவணை 2026

தேதிபாடம்
15.05.2025கணிதம்
19.05.2025அறிவியல்
22.05.2025சமூக அறிவியல்
26.05.2026மொழிப்பாடம்
30.05.2026மொழிப்பாடம்


தேர்வு விடைத்தாள் மதிப்பீடு
பொதுவான நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வு நடைபெற்ற 10 நாட்களில் விடைத்தாள் மதிப்பீடு பணி தொடங்கப்பட்டு 12 நாட்களில் முடிக்கப்படும். உதாரணத்திற்கு பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் தேர்வின் விடைத்தாள் மார்ச் 3-ம் தேதி திருத்தும் பணி தொடங்கப்பட்டு மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.

தற்போது வெளியிட்டுள்ள பொதுத்தேர்வு அட்டவணை உத்தேச அடிப்படையில் வெளியிடப்பட்டவையே ஆகும். நாடு முழுவதும் பள்ளிகளிடம் இருந்து மாணவர்களின் இறுதி பட்டியல் பெற்ற பின்னர் இறுதி அட்டவணை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.