மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் 4,000க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகளின் கற்றலும், எதிர்காலமும் பெரிதும் கேள்விக்குறியாகியுள்ளன.
அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்கள்
எனவே விரைந்து காலியிடங்களை நிரப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தால் தற்போது வரை எதுவும் செய்யவில்லை. ஏதேதோ காரணங்களை கூறி காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறது. அதேசமயம் கவுரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய எண்ணிக்கையை 8,000ஆக உயர்த்தியுள்ளனர். இந்த செயல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தமிழகம்
பிச்சை எடுத்தாலும் படி என்று நம்முடைய சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கே உணர்த்தியது நம்முடைய தமிழகம். ஆனால் தற்போதைய திமுக அரசுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். எனவே தான் தமிழகத்தின் கல்வி அமைப்பை அனைத்து கோணங்களிலும் சிதைத்துவிட்டது என்று விமர்சித்துள்ளார். மேலும் கவுரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி தற்காலிக ஏற்பாட்டை செய்து தப்பித்துக் கொள்ள பார்க்கின்றனர்.
போதிய சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு
இத்தகைய திமுக அரசின் அலட்சியத்தால் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளின் படி, சம்பளம் வழங்குவது இல்லை. தொடர்ந்து இழுத்தடித்து கொண்டே செல்கிறது. மீண்டும் மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்துவது ஏன்? இது பெரிய உழைப்பு சுரண்டல் அல்லவா? ஏற்கனவே திமுக ஆட்சியில் ஏராளமான குறைகள் இருக்கின்றன.
தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
குடிநீர் வசதி, கழிவறை, தங்கும் விடுதி, உணவு, வகுப்பறை, ஆய்வகங்கள், பேருந்து என அடிப்படை வசதிகள் ஒன்றி அரசு கல்லூரிகள் செயலிழந்து கிடக்கின்றன. இதற்கிடையில் பேராசிரியர்களும் இல்லை என்றால், என்ன செய்வது? தமிழக அரசு கல்லூரிகளை முடக்கப் பார்க்கிறதா ஆளும் அரசு? இதனால் தான் மாணவர் சேர்க்கையை பல மாதங்கள் நீட்டித்தாலும் போதிய பலன் கிடைப்பதில்லை.
நயினார் நாகேந்திரன் விமர்சனம்
இது படிக்கும் பிள்ளைகள், படித்த பட்டதாரிகள் வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. தமிழகத்தை ஆளும் திமுக அரசின் அராஜக போக்கிற்கு விரைவில் முடிவு கட்டுவோம். அதற்காக அனைவரும் முழு மூச்சாக உழைப்போம். எஞ்சியிருக்கும் பெருமைகளை மீட்டெடுப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.