உலகமே தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. தொழில்நுட்பம், அலுவலக வேலை ஆகியவற்றை தாண்டி, செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது மருத்துவம் உட்பட அனைத்து துறைகளில் கால் பதிக்க துடங்கிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம், துள்ளியமாகவும், வேகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் வேலைகள் செய்ய முடிகிறது. இதனால் பலர் தங்களின் வேலைகளை இழக்கும் அபாயம் இருப்பதாக கருதினாலும், படிக்கும் முறையும், புதிதாக அறிந்துகொள்ளும் முறையையும் செயற்கை நுண்ணறிவு வேகப்படுத்துவதுடன், தன்னிச்சையாக படிக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையில் உண்மையாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான
செயற்கை நுண்ணறிவு கருவிகள் வந்துவிட்டது. அதில் இலவசமாகவும், மாணவர்களுக்கு உதவும் வகையில் உள்ள 10 ஏஐ கருவிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.கூகுள் NotebookLM:
மாணவர்களுக்கு மிக சிறப்பாக உதவும் ஒரு ஏஐ கருவி, Google நிறுவனத்தின் NotebookLM ஆகும். பொதுவாகவே மாணவர்கள் பல குறிப்புகளை எடுத்து படிக்க வேண்டியது உள்ளது. இந்த கருவியில் PDF, Google Docs, website links உள்ளிட்ட வடிவங்களில் குறிப்புகளை அல்லது புத்தகங்கள், செய்தித்தாள், கட்டுரை, ஆய்வுக் கட்டுரை ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, அதிலிருந்து சுருக்கமான விளக்கத்தையும், நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறை கேள்வியாகவும் கேட்டு அறிந்துகொள்ளலாம்.
பெரிய குறிப்புகளையும் சுருக்கி, தேவையானவற்றை தனியாக பிரிவு புதிய குறிப்பு உருவாக்கி தரும். அதனை ஆடியோ வடிவில் மாற்றிக்கொள்ளலாம். அல்லது பெரிய ஆய்வு கட்டுரையும், சுருக்கி முதன்மையான புள்ளிகளை மட்டும் எடுத்து காட்டும். மேலும், அதிலில் இருந்து Quiz போன்ற கேள்வி மற்றும் ஆப்ஷன் பதில்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு 100 பக்கங்கள் கொண்டு புத்தக்கத்தை கூட விரைவாகவும், எளிதாகவும் படிக்க இந்த கருவி உபயோகமாக இருக்கும். தேவையான தகவல்களை தனியாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
2.கான்வா ஏஐ (Canva AI)
கணினியில் போஸ்டர் டிசைன் அல்லது கிராப்பிக் டிசைன் உருவாக்க நினைக்கும் மாணவர்களுக்கு, Canva AI கருவி மிக உதவியாக இருக்கும். பிராஜட்-களில் தாங்கள் நினைப்பதை காட்சிப்படுத்த இந்த கருவியில் உள்ள Magic Write, Magic Design, Magic Media ஆகியவற்றை கொண்டு உருவாக்கிக்கொள்ள முடியும். எழுத்து வடிவிலும், அல்லது பேச்சு வடிவிலும் கூட தகவல் கொடுத்தால், அதனை உருவாக்கி தரும் திறன் கொண்டுள்ளது. இந்த சேவை பெரும்பாலும் கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இலவசமாக சில குறிப்பிட்ட சேவைகளை பெற்றுகொள்ளலாம்.
3.எழுதுவதற்கு உதவும் ஏஐ கருவிகள்
மாணவர்கள் என்றால், எழுவதற்கு அதிகளவில் பணி இருக்கும். அதே நேரம் அனைத்தையும் இலக்கண பிழை திருப்பது என்பது கடினமாக இருக்கும். இலக்கண பிழையை திருத்துவது மட்டுமின்றி, பிழை இல்லாமல் எழுதவும் Grammarly மற்றும் QuillBot ஆகிய கருவிகள் மூலம் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் எழுதியதை மேம்படுத்தி எழுதுவது, பிழை கண்டறிவது, வேறு வார்த்தைகள் வழங்குவது உள்ளிட்டவற்றை இந்த கருவிகள் மூலம் செய்யலாம். இக்கருவிகள் இலவசமாக கிடைத்தாலும், மேம்பட்ட சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
4.வீட்டு பாடம், கணக்கு பாடம் செய்ய உதவும் Student AI
மாணவர்கள் கணிதத்தில் பெரும் கவனம் செலுத்துவது அவசியாக கருதப்படுகிறது. கணிதம் என்பதை கட்டாயம் ஒருவர் கற்றுக்கொடுக்கும் வேண்டும் என நிலை இருக்கிறது. ஆனால், இந்த கருவி மூலம் கணிதத்தை கற்றுக்கொள்ளலாம். மேலும் வீட்டு பாடம், வகுப்பு பாடங்களை ரிவைஸ் செய்து படிக்க, கட்டுரை எழுத உதவுவது, விரைவாக படிக்க பாடத்தில் இருந்து கேள்வி- பதில்களை உருவாகுவது என மாணவர்களுக்கான ஒரே கருவி என்ற அடிப்படையில் Student AI செயல்படுகிறது.
5.Mindgrasp ஏஐ
படிப்பதற்கான எளிய உதவியாக இருக்கும் கருவி Mindgrasp ஏஐ ஆகும். ஆடியோ, வீடியோ, வெப் லிங்க், PDF என எந்த வகையில் கொடுத்தாலும், அதனை சில நொடிகளில் குறிப்புகளாகவும், எளிய முறையில் முக்கிய தகவல்களுடன் மாற்றவும் இக்கருவி உதவியாக இருக்கும். அவைமட்டுமின்றி, பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணத்தில் இருந்து நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை தேடி, எளிய முறையில் ஒழுங்குபடித்தி தரும். அதனை நன்கு புரிந்துகொண்டு படிக்கும் வகையில், கேள்வி-பதில்களையும், வினாடி-வினா அமைப்புகளையும் ஏற்படுத்தி தரும். கூடுதாக அது சார்ந்து, இணையதளத்தில் இதர விவரங்களையும் கூட அறிந்துகொள்ளலாம்.
6.ஆடியோவை எழுத்தாக மாற்றும் கருவி
வகுப்பறை, உரையாடல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றை முறைப்படுத்தி எழுத்து வடிவில் மாற்றி தரும் கருவி Otter.ai ஆகும். குறிப்பாக மாணவர்களுக்கு ஆசிரியர் நடத்தும் பாடங்களை எழுத்து வடிவில் குறிப்புகளாக உருவாக்கி தரும். இவைமட்டுமின்றி, ஆன்லைன் வீடியோ வகுப்புகளிலும் இக்கருவியை உபயோகம் படுத்திக்கொள்ளலாம்.
7.படிப்பதை எளிமையாக்கும் கருவி
Studyable எனப்படும் மற்றோரு ஏஐ கருவி மாணவர்களுக்கு படிப்பதை எளிதாக்குகிறது. குறிப்பாக கணித பாடத்தில் கணக்குகளை படிப்படியாக விளக்கி புரிய வைப்பது, அறிவியல் பாடங்களில் கடினமாக தலைப்புகளில் புகைப்படம், வரைப்படம் ஆகியவற்றை கொண்டு விளக்குவது ஆகியவற்றை இக்கருவியின் மூலம் செய்துகொள்ளலாம். மேலும், கட்டுரை எழுவதற்கும் இக்கருவி உதவும், தோராயமாக அதுவே கட்டுரையை எழுதி கொடுக்காமல், அதிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, அதனை சரிசெய்ய உதவும்.
8.கூகுள் Gemini/ ChatGPT
மிகவும் வைரலான, பொதுவான பயன்படுத்தப்படும் ஏஐ கருவிகளாக Gemini, ChatGPT உள்ளது. இதர கருவிகள் செய்யும் அமைத்து பயன்பாடுகளையும் இக்கருவிகள் மூலம் செய்துகொள்ளலாம். மேலும், ஒரு தலைப்பு மட்டும் கொடுத்தால், இணையதளத்தில் இருந்து ஆழமான குறிப்புகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
99.படிப்பதற்கு திட்டமிடல்
Notion AI என்ற கருவி மூலம் மாணவர்கள் அவர்களின் நோட்ஸ், ஆய்வு கட்டுரைகள், இதர கட்டுரை ஆகியவற்றை வழங்கினால், அதனை திரித்து முக்கிய புள்ளிகளை கண்டறிந்து சுறுக்கமாகவும், தெளிவாகவும் இக்கருவி வழங்கும். உதாரணத்திற்கு ஒரே தலைப்பில் பல கட்டுரைகள், குறிப்புகளை ஒன்றாக கொடுத்தால், அதிலிருந்து ஒரு தெளிவான குறிப்பு அடங்கிய கட்டுரையை வழங்கும். இதில் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அதே நேரம், படிப்பதற்கு முறையாக திட்டமிடல் மற்றும் அதனை பூர்த்தி செய்து மேம்படுத்துவதைக் கணக்கிடவும் இக்கருவி உதவியாக இருக்கும்.
10.வினாக்கள் உருவாக்கும் ஏஐ
Quizlet AI என்பது அட்வாண்ஸ்டு கருவி ஆகும். படிப்பதை எளிதாகும் சிறந்த கருவி இது. இதன் மூலம் ஒரு தலைப்பில் வினா- வினா உருவாக்குவது, பல விளையாட்டு முறைகளில் பாடங்களை கற்க வைப்பது, கடினமான பாடங்களை எளிமையாக புரிய வைக்க பல்வேறு கற்பித்தல் முறையை அணுவது என இக்கருவி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக உதவுகிறது. மாதிரி தேர்வுகளுக்கான வினாத்தாள்களை இக்கருவி மூலம் உருவாக்கிக்கொண்டு பயன்பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டுப்பாடத்திற்கு உதவும் பெற்றோர்களுக்கு இக்கருவி உதவியாக இருக்கும். (All Images - Freepik)
ஏஐ என்பது ஒரு நவீனதொழில்நுட்ப கருவி மட்டுமே. அவை வழங்கும் தகவல்களை அனைத்து சரியானவை என்று அர்த்தம் கிடையாது. இக்கருவிகள் இணையதளத்தில் எளிதாக கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன. இதன் உபயோகம் மற்றும் எந்த அளவிலான பயன்பாடு என்பது பயன்படுத்துபவரையே பொறுத்து உள்ளது. இந்த கட்டுரை ஒரு தகவல் பதிவு மட்டுமே ஆகும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.