டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 727 கூடுதலாக சேர்த்து 4,662 காலிப்பணியிடங்களுக்கு தற்போது நிரப்பப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் இன்று (அக்டோபர் 22) வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவே அறிந்துகொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு விவரங்கள்
விண்ணப்பித்தவர்கள் : 13,89,743
அனுமதிக்கப்பட்டவர்கள் : 13,89,738
எழுதியவர்கள் : 11,46,663
மொத்த பதவிகளின் எண்ணிக்கை : 32
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 4,662
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளுவது எப்படி?
தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : இணையதளத்தை திறந்த உடனே அதில் முடிவுகளுக்கான நேரடி லிங்க் இடம்பெற்று இருக்கும்.
படி 3 : அல்லது முகப்பு பக்கத்தில் Announcement அல்லது Exam Dashboard ஆகிய இடங்களில் முடிவுகளுக்கான லிங்க் இடம்பெற்று இருக்கும்.
படி 4 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து, தேர்வர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டவும்.
படி 5 : திரையில் முடிவுகள் இடம்பெற்று இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை நிலையை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
ஆன்லைன் வழி சான்றிதழ் பதிவேற்றம்
அடுத்தக்கட்டமாக கட்-ஆஃப் அடிப்படையில் இணையதளம் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் பதிவு எண்கள் இடம்பெற்று இருக்கும். தெரிவு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் நேரடியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் 2025-ம் ஆண்டு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகியது. இப்பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது. தொடர்ந்து, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிராபகர் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் இறுதியில் 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன. கலந்தாய்வின் வரையும் காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.