முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது.
தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் நிலை I - 57, உடற்கல்வி இயக்குநர் நிலை I -102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும்.
ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.