தமிழகம் முழுவதும் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றுமுதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 7 (இன்று) முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதள வசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் (ரூ.48) செலுத்த தேவையில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.
தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப் பிரிவுகளில் 1.27 லட்சம் இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.