WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 24, 2025

பொதுத்தேர்வு அட்டவணை இந்த மாதம் வெளியாகுமா? எதிர்பார்ப்பில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள்.

 

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான பொதுத்தேர்வு அட்டவணை, அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்வு தேதிகளை விரைவாக அறிந்துகொள்ள மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு 2025-26

தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டு வரை, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. ஆனால் பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-யின் அடிப்படையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பழைய முறையின்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கல்வி ஆண்டு முதல் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அராசணையை வெளியிட்டது. அதன்படி, 2025-26 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டை போல வெளியிடப்படும்

2024-25 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் வாரமே வெளியிட்டப்பட்டது. அதே போன்று, இந்த கல்வி ஆண்டிற்கு பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஜூலை மாத இறுதியில் தெரிவித்திருந்தார்.

பள்ளி நாட்காட்டியின்படி, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காரணத்தினால், தேர்வு தாள் மதிப்பீடு பணிகளும் விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிடப்படும் என கருதப்படுகிறது.

எதிர்பார்ப்பில் மாணவர்கள்

வழக்கமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதமும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதமும் தேர்வு நடைபெற்று முடிவடையும். அதனைத்தொடர்ந்து, முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும். இந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வுகள் முடிவடையும் வகையில் அட்டவணை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம், பருவ மழை, தீபாவளி விடுமுறை ஆகியவற்றின் காரணங்களினால், பொதுத்தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. இருப்பினும், மாணவர்கள் தேர்விற்கு திட்டமிட்டு தயாராக ஏதுவாக விரைந்து அட்டவணையை வெளியிட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

கால அட்டவணையில் என்னென்ன இடம்பெறும்?

பொதுத்தேர்வு கால அட்டவணையில் செய்முறைத் தேர்வு, வகுப்பு மற்றும் பாட வாரியாக பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.