தொலை நிலைக்கல்வியில் படித்து டி.ஆர்.பி., நடத்திய மூன்று தேர்வுகளிலும்
வெற்றி பெற்ற ஆசிரியை விடாமுயற்சிக்கு முன்னுதாரணமாக உள்ளார்.
தேனி அருகே அரப்படிதேவன்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர். இவரது மனைவி தனலட்சுமி,30. இவர் பிளஸ் 2 முடித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளார்.கல்விக்குயில் அதன்பின் தொலைநிலைக்கல்வியில் பி.ஏ.,(வரலாறு) பட்டம் பெற்று ரெகுலரில் பி.எட்., முடித்துள்ளார். மீண்டும் தொலைநிலைக் கல்வியில் எம்.ஏ.,பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, டி.இ.டி. நடத்திய பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்று 65.02 வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் தாள்-1 இடைநிலை ஆசிரியர் தேர்விலும் வெற்றி பெற்று 65.92 வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆசிரியை தனலட்சுமி கூறியதாவது:
பிளஸ் 2 முடித்தவுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தேன். தொடர்ந்து வரலாறு பாடத்தை தேர்வு செய்து பட்டப்படிப்புகள் தொலைநிலைக்கல்வியில் தான் படித்தேன். பி.எட்., படித்த பிறகு டி.ஆர்.பி., தேர்வுக்கு தயார் செய்து வந்தேன். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கல்விக்குயில் மூன்று தேர்வுகளில் ஒரு மார்க் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். மனம் தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து தேர்வுக்கு தயார் செய்தேன்.கல்விக்குயில் அதன் விளைவாக தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்து மகிழ்ச்சியாக உள்ளது. "சிலபஸ்' தெரிந்து கொண்டு அதற்கான பாடத்தொகுப்புகளை வினா-வங்கி வகையில் நோட்ஸ் எடுத்து படித்தால் வெற்றி உறுதி. விடா முயற்சியும் முக்கியம்,என்றார்.www.kalvikkuyil.blogspot.com
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.