WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 14, 2014

PGTRB :வணிகவியல் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு

தினமணி நாளிதழ்



தினகரன் நாளிதழ்


www.kalvikkuyil.blogspot.com

முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு, தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலவளவைச் சேர்ந்த ஜி. முத்து தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட். பட்டம் பெற்றிருக்கிறேன். 2013 ஜூலை 21இல் ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தகுதித் தேர்வை எழுதினேன். அதில், மொத்தம் 146 மதிப்பெண்களுக்கு 101 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நான் 60 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி.

இந்தப் பிரிவில் கட்-ஆப் மதிப்பெண் 102 ஆக உள்ளதால், தகுதி பெறவில்லை. கேள்வித்தாள் அமைப்பு மற்றும் கீ ஆன்சர் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகளால் எனது மதிப்பெண் குறைந்துள்ளது. 300 காலிப் பணியிடங்களை நிரப்ப 354 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 முறை இதற்கான பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பிய மனு மீது தேர்வாணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, 2014 ஆகஸ்ட் 8ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும். மேலும், 2013 மே 9 ஆம் தேதி வெளியிட்ட முதுகலை வணிகவியல் தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.கே. சசிதரன், மனுவுக்கு பதிலளிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

1 comment:

  1. Statistic option question serial'a'47question deleted judgement is affected so many CV attended candidates. Actually this judgement is for some benifier

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.