WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 26, 2014

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல் 2 மணி முதல் அவர்கள் தேர்வு எழுதிய, தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்தில் அக்டோபர் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்-லைன் பதிவு கட்டணமாக 50 ரூபாயை பணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வு துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள் நகல் களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுக் கூட்டல் முடிவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும் என்பதால், ஒப்புகை சீட்டை பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.