WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 2, 2014

நூறு சதவீத தேர்ச்சிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாநில, மாவட்ட அளவிலான புத்தாக்க
பயிற்சி நிறைவு பெற்றது. தமிழகத்தில், சமீபத்தில் கவுன்சலிங் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரே மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும், ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வந்துள்ளனர். மேலும், சிலர், புதிதாக பணி நியமன உத்தரவை பெற்றுள்ளனர். புதிதாக பணி ஆணை பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாநில அளவிலான, உண்டு, உறைவிட புத்தாக்க பயிற்சி, மூன்று நாட்கள் நடந்தது. பயிற்சி, 29ம் தேதி துவங்கியது. நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் பள்ளியில், 178 பேருக்கும், கோபி வெங்கடேஸ்வரா பள்ளியில், 313 பேருக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. கொங்கு பள்ளியில் விலங்கியல் ஆசிரியர்களும், கோபியில் வணிகவியல் துறை ஆசிரியர்களும் பங்கேற்றனர். மாணவர்களுக்கு புரிய வைக்கும் வகையில், எவ்வாறு பாட வாரியாக நடத்துவது? மெதுவாக கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு, எவ்வாறு பாடங்களை புரியும் வகையில் நடத்துவது? குறிப்பிட்ட பாடங்கள் கேட்கப்படும் வினாக்கள் குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விளக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மூன்று நாட்களும், ஆசிரியர்களுக்கு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது. இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி, கடந்த, 30, ஒன்று ஆகிய தேதிகளில் அந்தியூர் ஆதர்ஷ் பள்ளியில் நடந்தது. இம்மாவட்டத்தை சேர்ந்த, 331 ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு, ஆசிரியர்கள் தினமும் வீட்டுக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். கல்வி மட்டுமின்றி, பிற நடவடிக்கைகளிலும் மாணவர்களை எவ்வாறு ஈடுபட செய்வது என்பது குறித்து, பயிற்சியின் போது விளக்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள், கருத்தாளர்கள் இப்பயிற்சியை மூன்று நாட்கள் வழங்கினர். இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ""மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகள் இன்று (நேற்று) நிறைவு பெறுகிறது. தினமும் பயிற்சி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வருகை சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்பிப்பர். மேலும், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., ஆகிய பொது தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது குறித்தும், ஆசிரியர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.