இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் சுமார் 5,500 மையங்களில் இன்று நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 22.80 லட்சம் மாணவ, மாணவிகள், தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - ‘நீட்’) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 30 நகரங்களில்.. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களில் தேர்வு நடைபெறும். அந்த வகையில், சுமார் 5,500 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மொத்தம் 720 மதிப்பெண்கள்: ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.
ஆள்மாறாட்டத்தை தடுக்க.. கடந்த 2024-ம் ஆண்டு வட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பிஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்டில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆள்மாறாட்டத்தை தடுக்கும் விதமாக, ‘நீட் தேர்வு நடைபெறும் மே 3-ம் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாளான 2-ம் தேதி ஆகிய 2 நாட்களும் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.