WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 26, 2026

‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு.

 

முதுகலை பட்​டப்​படிப்​புக்​கான ‘கியூட்' நுழைவுத்​தேர்வு முடிவு​கள் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்ள​தாக தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.

மத்​திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​களில் முதுகலை பட்​டப்​படிப்பு மாணவர் சேர்க்​கைக்கு 'கியூட்' நுழைவுத்​தேர்வு (பிஜி) நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வை மத்​திய கல்வி அமைச்​சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது.

அந்த வகை​யில் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான கியூட் (பிஜி) நுழைவுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 157 பாடப்​பிரிவு​களுக்கு கணினி வழி​யில் நடத்​தப்​பட்ட தேர்வை நாடு முழு​வதும் 3 லட்​சத்து 45 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ-​மாணவி​கள் எழு​தினர்.

இந்​நிலை​யில் கியூட் நுழைவுத்​தேர்வு முடிவு​களை என்​டிஏ இணை​யதளத்​தில் (www.exams.nta.nic.in/ceut-pg) வெளி​யிடப்​பட்டு உள்​ளது. தேர்​வர்​கள் இணை​யதளத்​தில் தங்​கள் விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட்டு மதிப்​பெண் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என என்​டிஏ அறி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.