WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 29, 2026

பொறியியல் கல்வி: மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு.

 

 இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கை கலந்​தாய்​வுக்​குரிய விண்​ணப்பப் பதிவு மே 2-வது வாரத்​தில் தொடங்​குகிறது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 400-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்கு 1.7 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இவை ஆண்​டு​தோறும் பொது கலந்​தாய்வு மூலம் ஒற்​றைச்​சாளர முறை​யில் நிரப்​பப்​படு​கின்​றன.

நடப்​பாண்டு பொறி​யியல் கலந்​தாய்வு, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் மூலம் ஜூலை மாதம் இணைய வழி​யில் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான விண்​ணப்​பப் பதிவு மே 2-வது வாரத்​தில் தொடங்​க​வுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஜூலையில் கலந்தாய்வு: இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 2-வது வாரம் முதல் தொடங்கும். விண்ணப்பம் பெறப்பட்டு ஜூன் மாதம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, ஜூலையில் கலந்தாய்வு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூனில் வெளியிடப்படும்.

இது​சார்ந்த கூடு​தல் விவரங்​களை https://www.tneaonline.org/ எனும் வலைத்​தளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம். மேலும், ஏஐ போன்ற தொழில்​நுட்​பங்​கள் வளர்ச்சி காரண​மாக பொறி​யியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்​டு​களாக அதி​கரித்​து​ வரு​கிறது. இந்​தாண்​டும் சேர்க்கை அதி​கரிக்​கும் என நம்​பு​கிறோம். இவ்​வாறு அதி​கரி​கள் கூறினர்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.