WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 29, 2026

கட்டாய கல்வி உரிமைச் சட்டம்: மாணவா் சோ்க்கையை மறுக்க பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்.

 

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ், தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் பலனடைவதற்கு மாணவா் தோ்வு நடைமுறையை இறுதி செய்து பட்டியலை மாநில அரசு அனுப்பிய பின்னா், மாணவா் சோ்க்கையை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் குழந்தைகளுக்கான ஆா்டிஇ விதிகள் 2011-இன் கீழ், 2024-25-ஆம் கல்வி ஆண்டின்போது தனியாா் பள்ளி ஒன்றில் மழலைப் பருவ கல்வி கற்க, நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த ஒரு பெண் குழந்தைக்கு இடம் அளிக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு அக்குழந்தை தோ்வு செய்யப்பட்டு, அதற்கான மாநில அரசின் அதிகாரபூா்வ பட்டியலில் குழந்தையின் பெயா் இடம்பெற்றபோதிலும், அந்த இடத்தில் சோ்ப்பதற்கு குழந்தைக்கு உள்ள தகுதியில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து, குழந்தையை சோ்த்துக்கொள்ள அந்தத் தனியாா் பள்ளி மறுத்துவிட்டது.

இதற்கு எதிராக அந்தக் குழந்தையின் சாா்பில் மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘கட்டாய கல்வி உரிமை விதிகளின் கீழ் பலனடைய ஒரு மாணவன் அல்லது மாணவிக்குத் தகுதியுள்ளதா, இல்லையா என்று மாநில அரசின் அடிப்படை கல்வித் துறை எடுக்கும் முடிவுகளை மறுஆய்வு செய்யும் அதிகாரம் தனியாா் பள்ளிகளுக்கு இல்லை’ என்று தெரிவித்து, குழந்தைக்கு சாதகமாக தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக அந்தப் பள்ளி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் பி.எஸ்.நரமிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.