WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 24, 2014

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்.

பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்,'
என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. மதுரையில் இதன் பொதுக் குழுக் கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் நாகசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.ஆசிரியர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் ஆசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில் ''சென்னையில் ஆசிரியர் தாக்குதலுக்குள்ளானது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.