WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 12, 2014

இளம் மாணவர்களுக்கான கணிதத்திறன் போட்டித் தேர்வு அறிவிப்பு.

                                 


சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கணிதத்திறன் போட்டித் தேர்வை அறிவித்துள்ளது.
டிசம்பர், 7ம் தேதி நடக்கும் தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், மாணவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
அறிவியல் மையத்தின் செயல் இயக்குனர், அய்யம்பெருமாள் வெளியிட்ட அறிவிப்பு: கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை, மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், கணிதத்திறன் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, டிசம்பர், 7ம் தேதி காலை, 11:00 மணி முதல், 12:30 மணி வரை நடக்கும். தேர்வில், 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும், அனைத்து மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம்.
இதற்கு வரும் 29ம் தேதிக்குள், தங்கள் பெயரை பதிவுசெய்ய வேண்டும். இதில், வெற்றி பெறுபவர்களுக்கு, தேசிய கணித நாள் விழா நடக்கும் டிசம்பர் 22ம் தேதி பரிசு வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும், 5,000 (ஒருவர்), 2,000 (2 பேர்), 1,000 (மூவர்), 500 ரூபாய் (30 பேருக்கு) பரிசு வழங்கப்படும். இவ்வாறு, அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.