WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 29, 2026

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்.

 

அரசு பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 5 புதிய டிப்​ளமா படிப்​பு​கள் விரை​வில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளன. தமிழகத்​தில் 55 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களும், 32 அரசு உதவி​பெறும் பாலிடெக்​னிக்​கு​களும், 400-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் உள்​ளன.

இவற்​றில் 25 வித​மான டிப்​ளமா படிப்​பு​கள் வழங்​கப்​படு​கின்​றன. பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ-​மாணவி​கள் கல்வி பயின்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தற்​போதைய வேலை​வாய்ப்​புச் சூழலை கருத்​தில் கொண்டு அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் பேக்​கேஜிங் டெக்​னாலஜி, பெட்​ரோகெமிக்​கல் இன்​ஜினியரிங், ஃபுட்​வேர் டெக்​னாலஜி, லெதர் மற்​றும் ஃபேஷன் டெக்​னாலஜி, ஃபேஷன் மற்​றும் குளோத்​திங் டெக்​னாலஜி ஆகிய 5 புதிய டிப்​ளமா படிப்​பு​களை அறி​முகப்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவுசெய்​துள்​ளது.

அவற்​றுக்​கான வரைவு பாடத்​திட்​டம் தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் இணை​ய தளத்​தில் (https://dte.tn.gov.in/) வெளி​யிடப்​பட்டு இருக்​கிறது. இது தொடர்​பான கருத்​துகளை curriculumspecial2023@gmail.com என்ற மின்​னஞ்​சல் முகவரிக்கு ஜூன் 30-ம் தேதி வரை அனுப்​பலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் கூறியுள்​ளார்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.