WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 23, 2026

தமிழக அரசு மாதிரி பள்ளியில் வடமாநில ஆசிரியர்களா? தவெக அரசுக்கு வேல்முருகன், சீமான் கண்டனம்!

 தமிழக அரசு பள்ளிகளில், நீட் பயிற்சிக்காக வட மாநில ஆசிரியர்களை நியமித்துள்ளது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரி பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு நீட், ஜே.இ.இ போன்ற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இதனால் இந்த பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் இந்த மாதிரி பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதனால் இப்பள்ளி தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில்,குப்பூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் சர்சசையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மொழி தெரியாத ஆசிரியர்களை வைத்து தமிழக மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும்? இதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.