WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 5, 2026

தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!

 

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் வெற்றி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பில்,

  • அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்வு.

  • குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 இலட்சம் வரை வழங்கப்படும்.

  • அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

  • தமிழக அரசு ஊழியர்களுக்கு 2,992 வகையான சிகிச்சைகள் மற்றும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.