WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 26, 2014

தமிழக வனத்துறையில் 181 பணி.

                       

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை: தமிழ்நாடு வனத்துறை

பணி: வனவர் (பாரஸ்டர்)

காலியிடங்கள்: 148



துறை: தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம்

பணி: வனவர் (பாரஸ்டர்)

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 = தர ஊதியம் ரூ.4,400



துறை: அரசு ரப்பர் கழகம்

பணி: கள உதவியாளர் (ஃபீல்டு அசிஸ்டெண்ட்)

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தகுதி: விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்யூட்டர் சயின்ஸ், , சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். SC,ST,BC,MBC பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கும் தேதி: 02.01.2015

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2015



எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.02.205

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.60

தேர்வுக் கட்டணம்: ரூ.262



மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.