தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (பி.எட், எம்.எட்) 5வது பட்டமளி ப்பு விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. தமிழக ஆளுநர் ரோசய்யா தலைமை வகித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் கோவிந்தா, உயர்கல்வித்துறை செயலாளர் ஹேமந்த்குமார் சின்கா, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வ நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழா வில் எம்.எட் பட்டப்படிப் பில் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவி மாரியம்மாள், பி.எட் பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நித்தியா உள்ளிட்ட பி.எட்., எம்.எட்., எம்.பில் முடித்த 74 பேருக்கு நேரடியாக ஆளுநர் ரோசய்யா பட்டங்கள் வழங்கினர். இதையடுத்து பி.எட்., எம். எட்., எம்.பில் பட்டம் முடித்த மொத்தம் 69,473 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.