WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 4, 2015

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை (பிப்.5)
முதல் தொடங்க உள்ளது.

பிப்ரவரி இறுதிவரை நடைபெறும் இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 2,300 தேர்வு மையங்களில் சுமார் 8.82 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பாடங்களில் 200-க்கு 150 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 50 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தப்படும்.

தொழில் பிரிவு மாணவர்களுக்கு 2 பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி இறுதிக்குள் இந்தத் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் பட்டியலை அளிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.

சென்னையில்....

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தத் தேர்வுக்காக 299 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 13 முதல் 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள 416 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.