WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 20, 2015

தொழில்நுட்ப தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி: குழப்பத்தில் கலையாசிரியர்கள்

அரசு பள்ளிகளில், கலையாசிரியர்களாக பணிநியமனம் பெறுவதற்கான முக்கிய தேர்வாக கருதப்பட்ட தொழில்நுட்ப தேர்வுகள் நடந்து முடிந்து, ஒன்பது மாதங்கள் முடிந்தும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில், 2014 மே மாதம் தொழில்நுட்ப தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளை மாநிலம் முழுவதும், 48 ஆயிரத்து 567 பேர் எழுதினர். கோவை மாவட்டத்தில், 3,205 பேர் எழுதினர். ஒன்பது மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை.தற்போது, கலையாசிரியர்கள் பணிநியமனத்தில் போட்டித்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் பரிசீலிக்கப்படுமா, என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஆனால், அரசுத்தேர்வுத்துறை இதுகுறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் தயக்கம் காண்பித்து வருகின்றது.

தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், '' பிற தேர்வுகள் போன்று, கலையாசிரியர்களுக்கான தேர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும். பெயரளவில் நடத்தி, தேர்வர்களை குழப்புவது சரியல்ல. கலையாசிரியர் பணிநியமனம் தொடர்பாக தெளிவான பதில்கலை அரசு தேர்வுத்துறை அறிவிப்பதுடன், நடத்தி முடிக்கப்பட்ட தொழில்நுட்ப தேர்வு முடிவுகளை உடனடியாக, வெளியிடவேண்டும், '' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.