WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 8, 2015

பால் பவுடர் கலப்படத்தை எளிதாக கண்டறியும் முறையை கண்டுபிடித்த காந்திகிராம் பல்கலை!!

காந்திகிராமம்: பால் பவுடரில் கலப்படத்தை ரூ.5 செலவில், நுகர்வோரே நானோ
தொழில் நுட்பத்தில் எளிதாக கண்டறியும் முறையை, காந்திகிராம பல்கலை கண்டுபிடித்துள்ளது. பால்பவுடரில் புரோட்டீனை அதிகரிக்க மெலமைன் என்ற பொருளை சிலர் கலக்குகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு மயக்கம், வாந்தி, ஒவ்வாமை ஏற்படுகின்றன. சீனாவில், 2008ல் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அடுத்து பால்பவுடரில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. தற்போது பவுடரில் கலப்படத்தை குரோமோட்டோ கிராபி கருவி மூலம் கண்டறியலாம். ஒரு கருவி ரூ.15 லட்சம் என்பதால் சாதாரண மக்கள் கலப்படத்தை கண்டறிவது கஷ்டம். குறைந்த செலவில் கலப்படத்தை எளிதாக நுகர்வோர் கண்டறியும் முறையை, நானோ தொழில்நுட்பத்தில் காந்திகிராம பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் ஆபிரகாம்ஜான் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தங்க நானோ துகள் மற்றும் வெள்ளி நானோ துகள் திரவங்களை கண்டறிந்துள்ளனர். பேராசிரியர் ஆபிரகாம்ஜான் கூறியதாவது: தங்க நானோ துகள் கருஞ்சிவப்பு நிறமாகவும், வெள்ளி நானோ துகள் மஞ்சளாகவும் இருக்கும். திரவத்தின் ஒரு சொட்டை கலப்பட பால்பவுடரில் விடும்போது நிறம் மாறும். பவுடரில் தங்கம் நானோ துகள் விடப்பட்ட இடம் நீலமாகவும், வெள்ளி நானோ துகள் நிறமற்றதாகவும் மாறிவிடும். மூன்று மி.லி., தங்க நானோ துகள் திரவத்தை ரூ.10க்கும், வெள்ளி நானோ துகள் திரவத்தை ரூ.5க்கும் பொதுமக்களுக்கு தரமுடியும். 3 மி.லி., திரவம் மூலம், குறைந்தது 5 முறை சோதனை செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.