WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 26, 2015

தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 30ம் தேதி முதல் சான்று சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்காக சான்று சரிபார்ப்பு வரும் 30ம் தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை:
2013&2014ம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் உள்ள 183 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 17.12.2013ம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.

மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 16.03.2014ம் தேதி நடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத்தன்மையினை அறியும் பொருட்டும் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 605 விண்ணப்பதாரர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 30.03.2015 முதல் 01.04.2015 வரை, 06.04.2015 மற்றும் 07.04.2015 ஆகிய நாட்களில் சென்னை பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பு கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.