செஞ்சி புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த கண் பார்வையற்ற மாணவி அனிதா என்பவர் நேற்று பிளஸ்-2 பொதுத் தேர்வை அதே பள்ளி தேர்வு மையத்தில் ஆசிரியர் ஒருவர் உதவியுடன் எழுதினார். இதே பள்ளியில் பிரெய்லி முறையில் படித்து வந்த இவர், பொதுத் தேர்வை எழுத தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அங்கு ஆசிரியர் வினாத்தாளை பார்த்து படித்து கேள்விகளுக்கு பதில் கேட்க, மாணவி அனிதா அந்த கேள்வியை புரிந்துகொண்டு அதற்குரிய விடையை கூறினார். அதை அந்த ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார். மற்ற மாணவ- மாணவிகளை காட்டிலும் மாணவி அனிதாவிற்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அவகாசம் வழங்கப்பட்டது. செஞ்சி அருகே தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்த குணசேகர் மகளான அனிதாவிற்கு பிறவியிலேயே கண் பார்வை கிடையாது. இவர் இதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் படித்து வருகிறார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர் 377 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாவட்டத்தில் 14 மாற்றுத்திறனுடைய மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.