WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 13, 2015

பாரத ஸ்டேட் வங்கியில் 2393 அதிகாரி பணி.

அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும்
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probationary officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CRPD/PO/2015-16/02 நிறுவனம்: State bank of India (SBI) மொத்த காலியிடங்கள்: 2000 + 393 பணி: Probationary officer (PO) பிரிவு வாரியான காலியிடங்கள் விரம்: SC – 308 ST – 339 OBC – 541 GEN – 812 Backlog Vacancies: SC – 67 ST – 219 OBC – 107 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 01.09.2015 தேதிக்கு முன்பு  தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். வயதுவரம்பு: 1.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1985 முதல் 01.04.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015 ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.05.2014 மேலும் சம்பளம், தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/documents/44978/7348676/SBIPO-2015-Full+English+Advertisement.pdf/fa1e559b-0504-4df6-9d11-534790f1dd95 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.