WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம்
தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 தோட்டக்கலை அலுவலர் பதவியில் 183 காலிப் பணியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நேர்முகத்தேர்வுக்கு 361 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப் புக்கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப் பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தையும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்டதாலேயே அவர்கள் பணிக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத முடியாது. குறிப்பிட்ட நாளில் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளத் தவறினால் அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு ஏதும் வழங்கப்பட மாட் டாது. இவ்வாறு விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.