சம்பளம் பெறும் ஆசிரியர் விவரம், "ஆன்-லைனில்' பதிவு செய்யப்படுவதால்,
விடுபட்டவர்கள் தங்களது விவரங்களை உடனடியாக தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மாத சம்பளம், "ஆன்-லைனில்' "இ-பே ரோல்' முறையில் வழங்கப்படு கிறது. தமிழகம் முழுவதும், மாவட்டம் வாரியாக ஆசிரியர்களின் விவரங்கள், "ஆன்-லைனில்' சேகரிக்கப்பட்டது. சில மாவட்டங்களில், ஆசிரியர் விவரங்களை சரிவர அளிக்காததால், சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து பள்ளி ஆசிரியர்களும் "இ-பே ரோல்'முறையில் சம்பளம் பெறும் வகையில், தங்களது விவரங்களை "ஆன்-லைனில்' பதிந்திருக்க வேண்டும். இதுவரை பதியாமல் விடுபட்ட ஆசிரியர்கள், உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். "ஆன்-லைனில்' விவரங்களை பதிவு செய்வதில் சிரமம் இருந்தால், அதுகுறித்தும் தெரிவிக்க வேண்டும் என, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.