WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 14, 2015

பயிற்சிகளில் தமிழ் ஆசிரியர்கள் புறக்கணிப்பு.

பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும்
நோக்கில், திட்டமிடப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு கையாளும் ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சிகளை அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும், 17ம் தேதி முதல்கட்ட பயிற்சிகள் துவங்க உள்ளன. 10 நாட்கள், மூன்று கட்டங்களாக பயிற்சிகள் நடக்கின்றன.பொதுத்தேர்வுகளில், பிற பாடங்களை போன்று தமிழ் பாடத்திலும் தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. மேலும், தமிழ் பாடத்தில் அடிப்படை வாசிப்புத்திறன் கூட இல்லாமல், பல மாணவர்கள் உள்ளனர். இதனால், தமிழாசிரியர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் புதிய பயிற்சியில் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், புத்தாக்க பயிற்சிகள், தமிழ் பாடங்களை கையாளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர் மற்றும் தமிழாசிரியர் ஒருவர் கூறுகையில், ''அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் மூலம், 10ம் வகுப்பை கையாளும், 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. தமிழ் பாடம் இதில் இடம் பெறவில்லை. தமிழ் பாடத்தை ஒரு மாணவர் ஆர்வத்துடன் புரிந்து படிக்க துவங்கினால், பிற பாடங்களின் மீது புரிதல் தானாக ஏற்படும். 'தமிழ் பாடத்திலேயே தடுமாறும் போது பிற பாடத்தில் ஆர்வம் எவ்வாறு வரும். தமிழில் அடிப்படை வாசிப்பு திறன் இல்லாமல் பல மாணவர்கள் உள்ளனர். குறிப்பாக, இலக்கணப்பகுதிகளை கற்பிக்க பல ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில், பயிற்சிகளில் தமிழாசிரியர்கள் புறக்கணிக்கப்படுவது சரியல்ல'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.