WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 8, 2015

மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிப்பு!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் வாசிப்பு திறன் 10 சதவீதம்
அதிகரித்துள்ளது, என, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்தார். எஸ்.எஸ்.ஏ., மற்றும் தொடக்கக் கல்வி சார்பில் மாணவர்களை மதிப்பீடு செய்து, தமிழ், ஆங்கிலத்தில் எழுதுதல், வாசித்தல் மற்றும் அடிப்படை கணித அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், மாநில அடைவு தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர் வாசிப்பு திறன் 90 சதவீதமாகவும், எழுதும் திறன் 80 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. வாசிப்பு, எழுதும் திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை தேசிய அளவில் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி வரும் பிரதாம் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அக்.,15 உலக கை கழுவும் தினம். மாணவர்கள் சாப்பிடும் முன்னரும், கழிப்பறையை பயன்படுத்திய பின்னரும், கை கழுவும் முறை குறித்து பள்ளிகளில் செயல் விளக்கம் நடத்த, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாணவர்கள் திறன் அடைவு தேர்ச்சிக்கு ஏற்ப அந்த ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை சார்பில் ஏ, பி, சி, என கிரேடு வழங்கப்படுகின்றன. இதில் தொடர்ந்து சி கிரேடு பெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.