காலாண்டு தேர்வில், 470க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 பேர்
தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான ரேங்க் பெற வைப்பதற்காக, கல்வி மாவட்ட அளவில், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்ககப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான ரேங்க் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அரிதாக உள்ளது. இந்த குறையை போக்க, நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி மாவட்ட அளவில், சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அதாவது அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 470 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்ற, 100 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, கல்வி மாவட்டத்துக்கு, ஒரு மையம் வீதம், தமிழகத்தில், 67 மையம் அமைக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாளில், காலை முதல், மாலை வரை, நடத்தப்படும் இப்பயிற்சியில், மாவட்ட அளவில், சிறந்த ஆசிரியர்களை கொண்டு, தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பொதுவாக தனியார் பள்ளிகளே, மாநில, மாவட்ட அளவில் ரேங்க் பெறுகின்றன. ஆனால், ரேங்க் பெறும் மாணவர்கள், பெரும்பாலும் அரசு பள்ளியிலிருந்து சென்றவர்களாகவே இருப்பர். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், தனிக்கவனம் எடுத்து, அவர்களிடம் இருக்கும் ஒரு சில குறைகளை மட்டும் நீக்கினால், அவர்களால், நிச்சயம் மாநில ரேங்க் பெற வைக்க முடியும். இதற்காக, கல்வி மாவட்ட அளவில், சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், மாநில அளவில், சிறந்த ஆசிரியர்களை கொண்டு, தமிழகம் முழுவதும் ஸ்கைப் மூலம், வீடியோ கான்பரன்ஸ் முறையிலும், சிறப்பு வகுப்பு நடத்தப்படும். இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளி மாணவர்கள், கணிசமான அளவுக்கு, ரேங்க் பட்டியலில் இடம் பிடிப்பது நிச்சயம். இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.