துண்டிக்கப்படும் தொலைபேசி இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீடாக
வழங்க வேண்டும் என்றும் வரும் ஜனவரி 1-ம் தேதிக்குள் இதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தொலைபேசி இணைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவது ’கால் டிராப்ஸ்’ (Call drops) எனப்படுகிறது. இத்தகைய துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முழு கட்டணம் வசூலித்து வந்தன. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், துண்டிக்கப்படும் தொலைபேசி இணைப்புகளுக்கு கட்டாயம் இழப்பீடு வழங்குவது குறித்து டிராய் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், துண்டிக்கப்படும் இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், நாள் ஒன்றிற்கு மூன்று துண்டிப்பு கால்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் தனது உத்தரவில் டிராய் குறிப்பிட்டுள்ளது.
இணைப்பு துண்டிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பான குறுந்தகவல் (SMS), USSD அனுப்ப வேண்டும். அதில் அந்த வாடிக்கையாளர் கணக்கில் எவ்வளவு செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும். அதேபோல், போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அடுத்த மாத பில்லில் நேர்செய்யப்பட்ட இழப்பீட்டு தொகை தொடர்பான விபரங்களை தெரிவிக்க வேண்டும் டிராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.