WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 16, 2015

பதவி உயர்வு எப்போது?முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு..

முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20
ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும். இந்த வேறுபாட்டால், பட்டதாரியாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், அவர்களை விட அதிகமாக படித்துள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது; ஊக்க ஊதியத்திலும் முரண்பாடு இருக்கிறது. இந்த வேறுபாடுக்கு காரணமான, அரசாணையை மாற்றக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; ஆனால், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த கோரிக்கையையே, அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை தீர்க்க, முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் ஜெகநாதன் தலைமையில், இரண்டு கமிட்டிகளை, அரசு அமைத்தது. இதுவரை, அதன் அறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் வைத்துள்ளது,'' என்றார். இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான, இடமாறுதல் கலந்தாய்வு, இன்று நடத்தப்படுகிறது. இதில், 650 இடங்களை நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். எனவே, காலியிடங்களை நிரப்ப, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, தொகுப்பூதியம் கொடுத்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 3 ஆண்டுகளில்... அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், பணிமூப்புப்படி, மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நியமிக்கப்படுகின்றனர். அதன்பின், மூன்று ஆண்டுகளில், முதன்மை கல்வி அதிகாரியாக முடியும்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.