வரும், 19ல், முதுநிலை ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி
Showing posts with label pg teachers news. Show all posts
Showing posts with label pg teachers news. Show all posts
Tuesday, February 7, 2017
Monday, December 21, 2015
ஆசிரியர்களுக்கு 20 கி.மீ., தூரத்துக்குள் தேர்வு பணியை வழங்கணும்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர்
புஷ்பராசு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் புதிதாக வளர்ந்து வரும் விரும்பதகாத செயல்களில் இருந்து மாணவர்களை மீட்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசகரை அரசு நியமித்துள்ளது. இருந்தும் தவிர்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகிறது. அவற்றை களைய மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் கொண்ட மாவட்டக் குழுவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். நம் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த அலகுத்தேர்வுகள் மற்றும் ஆயத்த தேர்வுகள், தலைமையாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடக்கும், பிளஸ் 2 செய்முறை தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை நியமிக்கும்போது, அவரவர் பணியாற்றும் பள்ளிகளில் இருந்து, 20 கி.மீ., தூரத்துக்குள் தேர்வு பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக ராமு, செயலாளராக காளிதாஸ், மாவட்ட பிரசார செயலாளராக செந்தில்குமார், மாவட்ட மகளிரணி செயலாளராக சுமதி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Friday, October 16, 2015
பதவி உயர்வு எப்போது?முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு..
முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20
Wednesday, August 26, 2015
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை.
ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, மாதந்தோறும், 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 14 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நியமித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை-கல்லாவி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 2,469 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 1 வகுப்பில், 541 மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பில், 674 மாணவர்கள் என மொத்தம், 1,222 படித்து வருகின்றனர். பள்ளியில், மேல்நிலை வகுப்புகளுக்கு கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்குப்பதிவியல், வேளாண்மை, தொழிற்கல்வி, வரலாறு என, ஆறு பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு விதிப்படி, 40 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால், இப்பள்ளியில் தமிழுக்கு, மூன்று ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். ஆங்கில பாடத்திற்கு, மூன்று ஆசிரியர்கள் இருந்த போதும், ஒரு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. கணித பாடத்திற்கு, நான்கு ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில், இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இயற்பியல் பாடத்திற்கு, இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். வேதியியல் பாடத்திற்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். உயிரியல் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் கூட இல்லை. வேளாண்மை பாடத்திற்கு, மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. 78 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 64 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இருந்த போதும், ஆண்டுதோறும் நடக்கும் பொதுத்தேர்வில், 70 முதல் 80 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை, மாவட்ட கல்வித்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதால், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், 14 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும், 70 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதற்கு போதிய நிதி இல்லாததால், பெற்றோர் ஆசிரியர் கழகமும் கையை பிசைந்து வருகிறது. இதற்காக தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்களிடம் மாதந்தோறும் நன்கொடை பெற்று வரும் நிலையில், போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாத காரணத்தால் ஒரு வகுப்பறையில், 81 மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது குறித்து, சி.இ.ஓ., தமிழரசு கூறியதாவது: ஆசிரியர்கள் கவுன்சலிங் நடந்து கொண்டிருக்கிறது. இது முடிந்தவுடன் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாதது குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் வகுப்பறைகள் கட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Tuesday, August 25, 2015
முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன...
முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட
Sunday, August 23, 2015
காலி பணியிடங்கள் மறைப்புஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில்,
Monday, August 10, 2015
அரசு பள்ளி மாணவர்கள் 'சென்டம்' வாங்க முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.
அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், பாஸ் மார்க் மற்றும் அதிக
Tuesday, August 4, 2015
காலிப்பணியிட விவரம்: ஆசிரியர் வலியுறுத்தல்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில
Monday, July 6, 2015
ஜூலை, 17ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு:முதுகலை ஆசிரியருக்கு பணிவரன் வழங்க தாமதம்.
கடந்த, ஐந்து ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்ட முதுகலை
Saturday, February 28, 2015
பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறை
Sunday, January 25, 2015
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு.
சென்னை: சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால்
Thursday, October 16, 2014
தர்மபுரியில் முதுகலை ஆசிரியர் சங்க கூட்டம்..
தர்மபுரி: "முதுகலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாட்டை அரசு களைய
Sunday, September 21, 2014
"விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது'!!
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
Saturday, September 20, 2014
தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்.!
சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத
Saturday, July 26, 2014
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.?
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனி
Subscribe to:
Posts (Atom)