WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 23, 2015

காலி பணியிடங்கள் மறைப்புஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில்,
காலியிடங்கள் மறைத்த, தமிழக அரசை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று, மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் இடமாறுதல், கலந்தாய்வு நடந்தது. தர்மபுரியில் நடந்த கலந்தாய்வில், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளிகளில் காலியாக உள்ள, தமிழ், கணிதம், தாவரவியல் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக, கலந்தாய்வில் கலந்து கொண்ட, 36 ஆசிரியர்களும், கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர். இதையடுத்து, கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களிடம் சாமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீண்டும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். ஆனாலும், காலி பணியிடங்கள் காட்டப்படாததை அடுத்து, காலி பணியிடங்களை மறைத்த, தமிழக அரசை கண்டித்து, தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.