தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 7,500க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சில மாதங்களுக்கு முன், 1,703 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது, பல கல்லூரிகளில், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், பேராசிரியர் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.
எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் வைத்து, நிரந்தரப் பேராசிரியர்களை நியமனம் செய்யும் வரை, கூடுதலாக, 1,000 கவுரவ விரிவுரையாளர்களை புதிதாக நியமிக்க, தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.