WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 21, 2026

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை!

 

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரபூா்வ நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை இந்த வாரம் வெளியிட்டிருந்தது.

அதில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றும் ஒளிந்திருக்கிறது. அதுதான், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்துக்கும், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்பது. இந்த ஆண்டு ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் தலா ஒரு சனிக்கிழமை மட்டுமே வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்பது தெரிய வந்துள்ளது.

நிகழ் கல்வியாண்டில், மொத்தம் 365 நாள்களில் வேலை நாள்கள் 210 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 220 நாள்கள் வேலை நாள்களாக இருந்து வந்தது. விடுமுறை நாள்கள் 155- ஆக உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210- ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 22 நாள்கள் அரசு விடுமுறை நாள்கள்.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தோ்வு செப். 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிறகு செப். 26 முதல் அக்.4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரையாண்டுத் தோ்வு டிச. 16-இல் தொடங்கி 23 வரை நடைபெறும். தொடா்ந்து, டிச. 24 முதல் ஜன. 3 வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறையாகும். ஜன.4-இல் பள்ளிகள் திறக்கப்படும். ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையும் வருகிறது.

தொடர் விடுமுறைகள் பட்டியலில், செப்.4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அடுத்து வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களாக அமைகிறது. இதனால் 3 நாள்கள் தொடா் விடுமுறை கிடைக்கிறது.

அதுபோல, செப். 14 திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

அக்டோபா் மாதத்தில் 19 மற்றும் 20 தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை வருகிறது.

நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், வார விடுமுறையாக 2 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது.

பொங்கல் பண்டிகை ஜன. 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால் தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.

நிகழ் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 2027- ஏப்.23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் தொடா்ச்சியாக ஏப்.24 முதல் மாணவா்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.