WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 23, 2015

'சிடெட்' விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்.

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில்,
திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு - 'டெட்' எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் பிற மாநில பள்ளிகளில் பணியாற்ற, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். இந்த ஆண்டுக்கான,'சிடெட்' தேர்வு, செப்டம்பர் 20ம் தேதி, நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், அதில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு, http://ctet.nic.in/ இணைய தளத்தில், பதிவு எண்ணை பதிந்தால், விண்ணப்பத்தை பார்க்க லாம். அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.