WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 16, 2014

தர்மபுரியில் முதுகலை ஆசிரியர் சங்க கூட்டம்..

தர்மபுரி: "முதுகலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாட்டை அரசு களைய
வேண்டும்,' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. மண்டல செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட தலைவர் பாரி, தேர்தல் ஆணையாளராக பங்கேற்று, தேர்தலை நடத்தி வைத்தார். மாவட்ட தலைவராக தங்கவேல், செயலாளராக அப்துல் அஜீஸ், பொருளாளராக வையாபுரி, அமைப்பு செயலாளராக முருகன், மாவட்ட துணை தலைவராக காவேரி மற்றும் சிவராமகிருஷ்ணன், பிரச்சார செயலாளராக சிவசங்கர், மாவட்ட தணிக்கையாளராக ராஜா, பி.ஆர்.ஓ.,வாக ஆரோக்கியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.