WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 6, 2015

ஜூலை, 17ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு:முதுகலை ஆசிரியருக்கு பணிவரன் வழங்க தாமதம்.

கடந்த, ஐந்து ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்ட முதுகலை
ஆசிரியர்களுக்கு, பணிவரன் முறை வழங்காத மேல்நிலைக் கல்வித்துறை இணை இயக்குனரை கண்டித்து, வரும், 17ம் தேதி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 2010 முதல், 2015 மார்ச் வரை, ஆயிரக்கணக்கான முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட ஆசிரியர்களை நியமிக்கப்பட்டபோது, பணி நியமன ஆணை மட்டுமே வழங்கப்பட்டது. பணி வரன்முறை ஆணை வழங்கப்படவில்லை. ஒரு ஆசிரியர் பணியில் சேர்ந்த அன்றோ, ஒரு சில மாதங்களிலோ அல்லது, ஒரு ஆண்டுக்குள்ளோ பணிவரன் முறை ஆணை வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டால்தான், அவர் பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு முடிந்தவுடன் தகுதிக்கான பருவம் முடிந்து, நிரந்தர அரசு ஊழியர் என்ற சான்றிதழைப் பெறமுடியும். மேலும், எம்.ஃபில்., எம்.எட்., போன்ற உயர் படிப்புகளுக்கு வளர் ஊதியம், ஊழியர் பணியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு பெறமுடியும். மருத்துவ விடுப்பும் எடுக்க முடியும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.