WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 7, 2017

உழைப்பூதியம் உயர்த்த கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

வரும், 19ல், முதுநிலை ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், தேர்வு பணி உழைப்பூதியம் உயர்த்தக்கோரி, பிப்., 19ல், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், சேலம் மாவட்ட தலைவர் பாரி கூறியதாவது: நடுவண் அரசு பள்ளிகளை போல், தமிழகத்திலுள்ள விடைத்தாள் திருத்தும், முதுநிலை ஆசிரியர்களுக்கு, ஒரு விடைத்தாளுக்கு, 15 ரூபாய் வழங்க வேண்டும். தேர்வு மைய மேற்பார்வை பணிக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆசிரியர்களுக்கு, தினப்படி அதிகரிக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் உள்ள பொதுத்தேர்வு மையத்தில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அப்பள்ளிகளில், ஒரு முதன்மை கண்காணிப்பாளர் மட்டும் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தேர்வு பணி முடிய தாமதமாகிறது. 400 மாணவர்களுக்கு, ஒரு முதன்மை கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும். தேர்வு காலங்களில், முதன்மை கல்வி அலுவலர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி, சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சேலம் மண்டலமான, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த, சங்க ஆசிரியர்கள், சேலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.