WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 8, 2015

ஆசிரியர் வேலை நிறுத்தம் பாதுகாப்புடன் பள்ளிகள் இயங்கியது.

சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (
ஜாக்டோ) சார்பில் இன்று ஒரு நாள் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும். என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் 24 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று பணிக்கு செல்லாமல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கம் போலஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடைப்பெற்றாலும் அரசு பள்ளிகள் முழுமை யாக செயல்பட பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் தமிழகம் முழு வதும் அனைத்து அரசு பள்ளிகளும் வழக்கம் போல செயல்பட்டன.அரசு தொடக்கப் பள்ளி கள், நடுநிலைப் பள்ளி கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ- மாணவிகள் வகுப்பிற்கு சென்றார்கள். காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடவேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வந்தனர். உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை பொறுத்த வரை 80 சதவீத ஆசிரியர் கள் பணிக்கு வந்தனர். தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் தான் ஆசிரியர்கள் அதிகளவு வரவில்லை. பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் யார் என்ற பட்டியல் தயாரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இரு ஆசிரியர் பள்ளிகள் அதிகளவு உள்ளன. அந்த பள்ளிகள் மட்டுமின்றி மற்ற அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர் களுக்கு பதிலாக மாற்று ஏற்பாட்டினை கல்வித்துறை செய்திருந்தது. அனைவருக்கும் கல்வி திட்ட சிறப்பு ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கற்கும் பாரதம் ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப் பாளர்களை கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. மேலும் பிரச்சினைக்குரிய இடங்களில் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிகள் திறக்கப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.