தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்துக்கு யுஜிசி 12-பி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன்மூலம் இப்பல்கலைக்கழகம் யுஜிசி மற்றும் மத்திய அரசு துறைகளின் அனைத்து நிதியுதவிகளையும் தாராளமாக பெறலாம்.
தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகள் தொடர்பான 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, தேவையான பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஆராய்ச் சிப் பணிகள் உள்பட பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 12-பி அந்தஸ்து வழங்கு கிறது. 12-பி அந்தஸ்து பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிதி மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறைகளிடம் இருந்து கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கும், ஆய்வுப் பணிகளுக்கும் நிதியுதவி கிடைக்கும்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் கடந்த 2002 முதல் செயல்பட்டு வருகிறது. கலை, அறிவியல், நிர்வாகம் சம்பந்தப்பட்ட பல்வேறு இளங்கலை, முதுகலை படிப்புகளையும், சான்றிதழ், டிப்ளமா படிப்புகளையும் தொலை தூரக் கல்வித் திட்டத்தின் மூலமாக வழங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 13 ஆண்டு களுக்கு மேல் ஆகியும் 12-பி அந் தஸ்து பெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், யுஜிசி நிர்ண யித்திருந்த அனைத்து விதிமுறை களையும் பூர்த்தி செய்ததால், 12-பி அந்தஸ்து வேண்டி திறந்த நிலைப் பல்கலைக்கழகம் யுஜிசிக்கு விண்ணப்பித்தது. இதைத் தொடர்ந்து யுஜிசி குழுவினர் அண் மையில் இப்பல்கலைக்கழகத் துக்கு நேரில் வந்து ஆய்வு செய் தனர். இதனால், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்துக்கு 12-பி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
யுஜிசி துணைத் தலைவர்
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ், ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, “தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்துக்கு 12-பி அந்தஸ்து வழங்கியுள்ளோம். இதற்கான ஆணை திங்கள்கிழமை (டிசம்பர் 21) பிறப்பிக்கப்பட்டது. 12-பி அந் தஸ்து பெற்றதன் மூலம் தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்துக்கு யுஜிசி மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகள், மற்றும் இதர நிதி அமைப்புகளிடம் இருந்து அனைத்து விதமான நிதியுதவிகளும் கிடைக்கும்” என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.