WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 18, 2024

பிளஸ் 2 தேர்வு கட்டணத்தை டிச.10-க்குள் செலுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

 



பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பெற்று ஆன்லைனில் டிசம்பர் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டண தொகையை பெற்று, ஆன்லைனில் டிசம்பர் 10-ம் தேதிக்குள் செலுத்துமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். செய்முறை பாடங்கள் கொண்ட மாணவர்களுக்கு ரூ.225, செய்முறை பாடங்கள் இல்லாத மாணவர்களுக்கு ரூ.175 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பிசி, பிசி-எம் பிரிவினருக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டண தொகையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20-ம் தேதி முதல் செலுத்தலாம். ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும்.


12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை வடிவிலான மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய, அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.