WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 15, 2026

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இனி மதிப்பெண் சரிபார்ப்பு இல்லை.

 

'இந்தாண்டு முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்படுவதால் இனி, மதிப்பெண் சரிபார்ப்புக்கு அவசியம் இருக்காது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்தாண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த தயாராகி வருகிறது.

இந்த ஆண்டுத் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள வாரியம், இது குறித்த தெளிவான விளக்கங்களை பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று வழங்கியது.

'ஆன்லைன்' வாயிலாக நடந்த கூட்டத்தில் பல்வேறு பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ.,யின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை இந்தாண்டு 46 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்தாண்டின் மிக முக்கிய மாற்றமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள் முதன்முதலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திரைவழி மதிப்பீடு முறையில் திருத்தப்பட உள்ளன.

மதிப்பீட்டு பணியில் தவறுகளை குறைக்கவும், விரைவாக முடிவுகளை வெளியிடவும் இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

இதனால், இனி பிளஸ் 2 விடைத்தாள்களின் மதிப்பெண்களை சரிபார்க்க முடியாது. பழைய முறையில், மாணவர்கள் மொத்த மதிப்பெண்கள் அல்லது விடுபட்ட மதிப்பெண்களில் உள்ள முரண்பாடுகளை களைய, அவற்றை சரிபார்க்கும் முயற்சியில் இறங்குவர்.

புதிய டிஜிட்டல் மதிப்பீட்டுத் திட்டத்தில், இது போன்ற முரண்பாடுகள் ஆரம்பத்திலேயே நீக்கப்படும். இருப்பினும், 10ம் வகுப்பு விடைத்தாள்களின் மதிப்பீடு, முன்பு போல காகித முறையிலேயே தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.