WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 27, 2015

அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை
விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், ஷால், தாவணி போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். 'ஷார்ட்ஸ், மிடி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், லெக்கிங்ஸ்'போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. 'போலீஸ், தீயணைப்பு படையினர் போன்ற சீருடைப் பணியில் ஈடுபடுவோருக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை' என கூறப்பட்டுள்ளது. Advertisement இந்த நடைமுறை, ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமலாகிறது. இதை மீறுபவர்கள் மீது, நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.