இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்ஃபி மோகம் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினமும் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது. செல்ஃபி பிரியர்களே
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆயவறிக்கை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா..
இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக இருப்பதாகவும், இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் அவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாம் எடுக்கும் செல்பியை வைத்து மனிதவள மேம்பாட்டாளர்கள் நம்மை எடை போடும் வேலையை மிக இலகுவாக செய்து முடித்து விடுகிறார்களாம். பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாகவும் மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
மேலும் பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.