WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 30, 2015

2016ல் எல்நினோவால் மனித குலத்திற்கு பாதிப்பு?

                              
2016 ம் ஆண்டில் எல் நினோ சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது. 2015 ம் ஆண்டில் உலகின் சில பகுதிகள் வறட்சியாலும், சில பகுதிகளில் மழை- வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்த ஆண்டில் எல் நினோ காரணமாக அடுத்த 6 மாதங்கள் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. 2015ம் ஆண்டு உலகின் மிக மோசமான வெப்பம் நிறைந்த ஆண்டாக வானிலை ஆய்வாளர்கள் கூறு வந்தனர். ஆனால் 2016ம் ஆண்டு வெப்பத்தின் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எல் நினோவின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 20 முதல் 30 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், 2016ம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும், இதனால் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என ஐநாவும் கூறி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் தெற்கு ஆப்ரிக்காவில் உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டும்.

மழை அளவு வெகுவாக குறைந்து வறட்சி அதிகம் இருக்கும் என்பதால் வரலாறு காணாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலை 5 முதுல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். கடும் வறட்சியால் பயிர்கள், குறிப்பாக அரிசி, சர்க்கரை, காபி போன்ற பயிர் வகைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

எல் நினோவால் மிக அதிக அளவிலான கடலின் வெப்பம், நிலப்பரப்பை நோக்கி வரும். 2016ல் புவியின் ஒரு பகுதி கடுமையான வெப்பம், வறட்சியாலும், மற்ற பகுதி கடுமையான மழை மற்றும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டின் காரணமாகவும் மனித குலம் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எல் நினோவால் 2016ல் எந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கமும், வறட்சியும் இருக்குமோ அதற்கு நேர்மாறாக லா நினாவால் அதற்கடுத்த ஆண்டு கடுமையாக மழை, வெள்ளம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.